அருள்மிகு ஸ்ரீ அனந்தசயனராமர் மற்றும் ஸ்ரீவேணு கோபாலஸ்வாமி திருக்கோயில் வேங்கிடாம்பேட்டை குறிஞ்சிப்பாடி கடலூர்
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹாஸ்ரநாம தத்துல்யம் ராமநாமவரானனே
“சிவ வாக்கியம்”
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ராம மந்திரத்தை மனனம் செய்யவும் மனம் ஒருமித்து லயிக்கவும் ஒரு சிறப்பான கோவில் உண்டு என்றால் அது வேங்கடாம்பெட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீவேணுகோபால சுவாமி மற்றும் ஸ்ரீஅனந்தசயனராமர் திருக்கோயில் என்பதில் ஐயமில்லை.
இத்திருக்கோவிலில் ஸ்ரீராமர் மிகவும் அழகாக மலர்ந்த முகத்துடன் ஏழு தலை ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பார்ப்பதற்கு ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோலத்தில் இருந்தாலும் எம்பெருமான் பக்தர்களுக்கு அதிசய கோலத்தில் இராமனாக காட்சிதருகிறார். அருகில் சீதா தேவி அமர்ந்து சேவை சாதிக்கிறார். பாதத்தின் அருகில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார். இந்த சேவை திருப்புல்லாணியை தவிர இந்த தலத்தில்தான் ஸ்ரீராமர் சயனகோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.இந்த அதிசய காட்சி பக்தர்களுக்காக இதோ:
|
ஸ்ரீ சயனராமர் |
இவர் ஸ்ரீராமர்தான் என திருக்கோவில் பாட்டச்சாரியார் விளக்கம் அளித்தது மிகவும் வியப்பாக இருந்தது. அதாவது இங்கு ஸ்ரீராமருக்கு இரண்டு கைகள்.ஏனெனில் மனிதபிறவி. நாபியில் தாமரை இல்லை. சிரசை ஒரு திண்டின்மேல் வைத்துள்ளார். ஸ்ரீஜானகி மட்டும் அமர்ந்துள்ளார். திருப்பாத கமலங்களை தாமரை தாங்குகின்றது.அருகில் ஆஞ்சநேயர் உள்ளார். இலக்ஷுமணன் ஏழு தலை ஆதிசேஷனாக படுக்கை விரித்துள்ளார்.ஆக இந்த தல பெருமாள் ஸ்ரீஅனந்தசயனராமர் என்பது மிகவும் தெளிவாக விளங்குகின்றது .
மேலும் இங்கு ஸ்ரீ ராமர் சயனம் கொண்டதற்க்கான குறிப்பும் கடலூர் மாவட்ட குறிப்பேடுகளில் தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஸ்ரீ ராமர் சீதையை தேடி இலங்கை செல்லும் முன்பு தில்லை சிதிரக்கூடத்தில் பூஜை செய்துவிட்டு சென்றதாகவும்> அதிலிருந்து உறங்காமல் இருந்ததாகவும்> பின்பு சீதப்பிரட்டியை மீட்டு வந்து இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமியை பிரதிஷ்ட்டை செய்து பின்பு இந்த இடத்தில உறங்க திருவுள்ளம் கொண்டாராம். இலக்ஷ்மண ஸ்வாமி ஆதிசேஷனாக படுக்கைவிரித்து அதில் ஸ்ரீராமர் சயனம் கொண்டுள்ளார். ஸ்ரீஆஞ்சநேயர் பரதனிடம் தூது செல்ல கையை மேலே உயர்த்தி தயாராக நிற்கிறார்.
இந்த திருக்கோவிலின் மூலவர் பாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி.
|
பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேனுகோபால ஸ்வாமி |
மூலஸ்தானத்துக்கு வெளியே ஜெய விஜயர்கள் மிகவும் கம்பீரமாக வாயிலில் காவல் புரிகிறார்கள் .வேணுகோபாலன் சன்னதிக்கு செல்லும் முன்பு இந்த ஜெய விஜயர்களை வணங்கியவுடன் நம் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை, மதம், மாச்சர்யம் அனைத்தும் விலகுகிறது. அதன்பின் தான் நாம் உள்ளே சென்று எங்கும் வியாபித்திருக்கும் வேனுகோபலனை நிர்மலமான உள்ளதோடு தரிசனம் செய்ய முடிகிறது. பகவான் தம்பதி சமேதராக இருப்பதால் தாயார்களிடமும், பகவாநிடமும் கருணையே வெளிப்படுகிறது .
|
ஸ்ரீ ஜெயன் |
|
ஸ்ரீ விஜயன் |
தெற்கு புறமாக சென்றால் ஸ்ரீ செங்கமல வல்லி தாயார் நம்மை மிகவும் கருணையோடு வரவேற்கிறார்.
ஸரசிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே தவளதராம் சுககந்தமால்ய சோபே | பகவதி ஹரிவல்லபே மனோஜ் ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரசஸீத மஹ்யம் ||
அதாவது " தாமரையை இருப்பிடமாக கொண்டவளே, தாமரையை கையில் தங்கியவளே, தூய வெள்ளாடையும் நறுமண மாலையும் அணிந்து அழகாய் விளங்குபவளே, பகவதி, திருமாலின் துணைவியே, விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவளே, மூவுலகையும் வளமளித்து காப்பவளே எனக்கு அருள் புரிவாய்" என்றுதான் வணங்க தோன்றுகிறது.
.
|
ஸ்ரீ செங்கமலவல்லித்தாயார் |
தயார் சன்னதிக்கு வெளி பிரஹாரத்தில் ஸ்ரீவிஷ்ணு பராமபத நாதராக மிகவும் கம்பீரமாக காட்சி தருகிறார். ஸ்ரீ விஷ்ணுவை தரிசனம் செய்யும்போது "பதிம் விச்வஸ் யாத் மேச்வரக்ம் சாச்வதக்ம் சிவமச்யுதம் | நாராயணம் மஹாஜ்ஞெயம் விச்வாத்மானம் பராயணம் " என்று
|
ஸ்ரீ விஷ்ணு |
"உலகிற்கு நாயகரும், உயிர்களின் தலைவரும், என்றும் உள்ளவரும், மங்கள வடிவினரும், அழிவற்றவரும், எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும், சிறநத புகலிடமாக இருப்பவருமான நாராயணனை தியானம் செய்கிறேன் " என்று பக்தி பெருக த்யானம் செய்ய தூண்டுகிறது. மூலவர் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் மிகவும் கம்பீரமாக அமர்ந்துள்ளார்.
|
ஸ்ரீ கருடாழ்வார் |
ஆண்டாள சன்னதி மற்றும் ஆழ்வார்கள் சன்னதி, உடையவர் சன்னதி முறையே அமையப்பெற்றுள்ளது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
|
ஸ்ரீ ஆண்டாள் |
|
ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் |
|
ஸ்ரீ ராமானுஜர்,பெரியாழ்வார் ,ஸ்ரீ பரகாலன் |
இவ்வளவு சிறப்புடனும் இன்னும் பல சிறப்புகளுடன் கூடிய இத்திருக்கோயில் 15ம் நூற்றாண்டில் செஞ்சியை ஆண்ட மன்னரின் சகோதரி வெங்கட்டம்மாள் என்பவரால் கட்டப்பட்டதாக அல்லது திருப்பணி செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ஏனெனில் ஸ்தபதியின் கூற்றின்படி இந்த கோயிலின் தூண்கள் 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலின் கிழக்கு மேற்கில் 236 அடி நீளமும் தெற்கு வடக்கில் 129 அடி அகலமும் உடையது.
வாயிலில் ஏழு நிலை ராஜ கோபுரமும், கோயிலுக்கு எதிரே 50 அடி உயரத்தில் மிகப்பெரிய கருங்கல் ஊஞ்சல் மண்டபம், மற்றும் தேர் நிலை உள்ளது. கோபுர வாசலில் இருந்து ஒரு கி.மீ . தொலைவில் 7 கிணறுகளுடன் கூடிய தீர்த்தம் உள்ளது. இவ்வளவு தொலைவில் தீர்த்தம் இருப்பதே இந்த திருக்கோயில் எவ்வளவு விஸ்தீர்னமாக சிறப்பாக இருந்தது என்பதற்கு சான்றாக உள்ளது.
|
50 அடி உயரமுள்ள ஊஞ்சல் மண்டபம் |
இத்தனை அதிசயங்களை உள்ளடிக்கிய இந்த திருக்கோயில் பல நூற்றாண்டுகளாக பூஜை புனஸ்காரங்கள் இல்லாமல் , பராமரிப்பு இல்லாமல் சீரிழந்து கோயில் மண்டபங்களெல்லாம் இடிந்து விழும் நிலையில் இருந்தது என்றால் யாராலும் நம்பமுடியாது. ஆனால் அதுதான் உண்மை.
பகவான் கிருபையால் ஜெர்மன் நாட்டில் ஹம் நகரில் உள்ள இந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தர் ஸ்ரீ வித்யா பூஷணம் சிவ ஸ்ரீ V . A . S . பாஸ்கர சுவாமிகள் தமிழ்நாட்டு திருகோயில்கள் தரிசனம் செய்யும்போது இந்த கோவிலை பார்த்து இவ்வளவு பழமையான புராதன கோயில் காக்கப்படவேண்டும் என்று மண்டபம் மற்றும் சன்னதிகள் கல் தூண்கள் கல் கூரைகள் அடியோடு அகற்றப்பட்டு பழமை மாறாமல் அவருடைய சொந்த செலவில் திருப்பணி செய்யப்பட்டு 02.02.2009 அன்று குடமுழுக்கு விழ நடைபெற்று நித்யபடி பூஜை நடைபெற்று வருகிறது.
|
முன்மண்டபம் திருப்பணிக்கு பின்பு |
|
கோவில் பின்புற தோற்றம் |
|
உற்சவர் வேனுகோபாலஸ் வாமி |
தொடர்ந்து இன்னும் செய்யப்படவேண்டிய ராஜகோபுர திருப்பணி, சுற்றுமதில் திருப்பணி,மீதமுள்ள மண்டப திருப்பணி இவைகளை நிறைவேற்ற எண்ணி சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் செமு.நட.ந.க.எண். 55682/2010/ஒய்1 நாள் 07.06.2011 அனுமதியின்படி எழுநிலை ராஜகோபுரம் பழுது ப[பார்த்து புதுப்பித்தல் திருப்பணியையும், சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் செமு.நட.ந.க.எண் 45404/2011/ஒய்6 நாள் 26.06.2012 அனுமதியின்படி மதில்சுவர் பழுதுபார்த்து புதுப்பித்தல் திருப்பணியையும் ஜெர்மன் சிவ ஸ்ரீ V.A .S பாஸ்கர சுவாமிகள் அவர்கள் தலைமயில் பக்தர்கள், பெரியோர்கள்,அரசியல் பிரமுகர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு உபாயமாக திருப்பணி நடைபெற்று வருகிறது.
தற்பொழுது ஹம நகரில் உள்ள இந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் சுவாமிகளின் கவனம் அங்கே உள்ளது. இருப்பினும் சவுக்கு கொம்புகள் கட்டப்பட்டு திருப்பணி தொடங்க தயாராக உள்ள பணியை பக்தர்களின் அன்பளிப்போடு 03.03.2014 அன்று ராஜகோபுர திருப்பணிக்கு பூஜைபோடப்பட்டு திருப்பணி நடந்து வருகிறது. தற்போதுள்ள திருப்பணி காட்சிப்படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
|
ராஜகோபுர திருப்பணிவேலை நடைபெறுகிறது |
|
ராஜகோபுர திருப்பணிவேலை மேல் அடுக்குத்தொற்றம் |
அனைவரும் நாடு பசுமை பெறவும், உலக சகோரத்துவம் வேண்டியும், பசி பஞ்சங்கள் நீங்கவும், மக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழவும், வேண்டுவோருக்கு வேண்டியதை வரி வழங்கும் ஸ்ரீ வேனுகோபாலனின் சான்னித்தியம் பெருகவும், காதால் கேட்டு கண்ணால் பார்ப்போரின்நோய்கள் நீங்கவும் திருக்கோயிலுக்கு நேரில் வந்து ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீஅனந்தசயனராமர், விஷ்ணு மற்றும் செங்கமலவல்லித்தாயார் அனைவரையும் தரிசித்து பலன் அடைய வேண்டும். முதற்கட்டமாக நாம் திருப்பணி செய்து நமது கலாச்சாரத்தின் சின்னமாக விளங்கும் புராதனமாக உள்ள இத்திருக்கொவிலை அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பாக விட்டுச்செல்லவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
இத்திருக்கோயிலைபபற்றி மேலும் விபரங்கட்க்கும், திருப்பணியில் பங்குபெறவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் .
ஜெர்மன் சிவா ஸ்ரீ V .A .S . பாஸ்கர சுவாமிகள் : 00492388302223
மீனக்ஷிபேட்டை லோகநாதன் : 9865325781
சென்னை G. இரவிச்சந்திரன் : 9080365975
Sir despite my complaint my pictures are being used after removing the watermark and without acknowledgement to copyright owner. Can you please take immediate action to either acknowledge me for the pictures or remove them?
ReplyDeletePriya Baskaran
Aalayam Kanden
ford escape titanium 2021 - HITC
ReplyDeleteThe babylisspro nano titanium hair dryer following are titanium chloride from HITC: · 1. All the where can i buy titanium trim codes for a casino in a specific game. · 2. All codes for a trekz titanium headphones slot machine in a titanium bar particular game. · 3. Best casino slots with bonuses.